/indian-express-tamil/media/media_files/2025/06/27/vikram-prabhu-2025-06-27-13-49-52.jpg)
விக்ரம் பிரபு
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு, தனது தாத்தாவும் நடிப்பில் உச்சம் தொட்ட பழம்பெரும் நடிகருமாக சிவாஜி கணேசன் இறந்தபோது கூட தன்னால் வர முடியவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், நடிப்புக்கு பெயர் பெற்றவர் சிவாஜி கணேசன், நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிப்புக்கு இலக்கம், நடிப்பு பல்கலைகழகம், நடிகர் திலகம் என பல பட்டங்களை பெற்றுள்ள சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவில் அடையாளம் பெற்ற நடிகர்களில் முக்கியமானவர்.
சிவாஜி நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானவர் அவரது மகன் பிரபு. அப்பாவை போலவே நடிப்பில் அசத்திய பிரபு பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் குறிப்பாக, ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருடனும் இணைந்து நடித்துள்ள பிரபு, தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். சிவாஜி குடும்பத்தில் இருந்து பிரபு முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், அவரது அண்ணன் ராம்குமாரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி முதல் தலைமுறை, பிரபு, ராம்குமார் 2-வது தலைமுறையாக இருக்கும்போது 3-வது தலைமுறை நடிகராக விக்ரம் பிரபு உருவாகியுள்ளார். ராம்குமார் போலவே அவரது மகன்களும் ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும், பிரபுவை போலவே அவரது மகன் விக்ரம் பிரபல தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி என்ற படத்தின் மூலம் அறிமுகமான விக்ரம் பிரபு, அடுத்து அரிமா நம்பி, துப்பாக்கி முனை என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்
அந்த வகையில் அடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் லவ் மேரேஜ். இந்த படம் தொடர்பான ப்ரமோஷனுக்காக பிகைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள விக்ரம் பிரபு, 21 வயதில் எனக்கு திருமணம் நடைபெற்றது. எனது மனைவிக்கும் அதே வயது தான். அதன்பிறகு நாங்கள் இருவரும் ஒன்றாக வளர தொடங்கினோம். நான் இப்போது இந்த நிலையில் இருக்க என் மனைவி தான் காரணம். அதேபோல் தாத்தாவுடன் நான் அதிகமாக பழகி இருக்கிறேன்.
என் அப்பா எங்களுக்கு கிடைக்காத பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது. நான் எங்க தாத்தாவுடன் பழகியதே இல்லை என்று சொல்வார். ஆனால் தாத்தா இறந்தபோது என்னால் வர முடியவில்லை. அப்போது தான் நான் படிப்பதற்காக, யு.எஸ். சென்றிருந்தேன். அந்த சமயத்தில் அவர் இறந்துவிட்டார். நான் அங்கிருந்து வருவதற்குள் இங்கு எல்லாம் முடிந்துவிடும் என்று சொன்னதால் என்னால் வர முடியவில்லை. அந்த வலி தாங்க முடியாதது. அப்போது தான் புரிந்தது இப்படி ஒரு நிலை வரும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.
தாத்தா கடைசியாக ஹாஸ்பிடலில் இருக்கும்போது என்னிடம் போனில் பேசினார். என்னடா இன்னும் இந்தியனாதான் இருக்கியா இல்ல அமெரிக்கனா மாறிட்டியா என்று கேட்டார். இதுதான் அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை என்று விக்ரம் பிரபு கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.