/indian-express-tamil/media/media_files/LDNsZhWFUyncRGW4qxOU.jpg)
சியான் விக்ரம்
/indian-express-tamil/media/media_files/vikram-18.jpg)
தமிழ் சினிமாவில் தனது கேரக்டருக்காக தனது உடல் அமைப்பையே மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் சியான் விக்ரமுக்கு முக்கிய இடம் உண்டு.
/indian-express-tamil/media/media_files/vikram-1.jpg)
1990-ம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவருக்கு பெரிய திருப்புமுணை ஏற்படுத்திய படம் 1999-ல் வெளியான சேது படம் தான்.
/indian-express-tamil/media/media_files/vikram-14.jpg)
பாலா இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து விக்ரமுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க காரணமாக இருந்தது. அதன்பிறகு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படமும் பெரிய வெற்றியை கொடுத்தது.
/indian-express-tamil/media/media_files/vikram-2.jpg)
தொடர்ந்து தூள், சாமி, அந்நியன், ஐ, இருமுகன் என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்திருந்த விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/vikram-15.jpg)
பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் பசுபதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/vikram-13.jpg)
தங்கலான் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது சுதந்திரதினத்தில் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/vikram-17.jpg)
கோலார் தங்க சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/vikram-19.jpg)
இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்தா படத்தை இயக்கிய இயக்குனர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/vikram-16.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விக்ரம் தற்போது வெளியிட்டுள்ள சில ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.