ஆக்ஷனில் மிரட்டும் விக்ரம்: மாளவிகா மோகனுக்கு என்ன கேரக்டர்? தங்கலான் டிரெய்லர் வைரல்!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Thangalan Movie

தங்கலான் படத்தில் விக்ரம்

தமிழ் சினிமாவில் நடப்பு ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இருக்கும் தங்கலான் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் தங்கலான். படத்தில் விக்ரம் தவிர, பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கோல்ட்ராகன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 
எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் பணிகளை கவனிக்க எடிட்டிங் பொறுப்புகளை ஆர்.கே. செல்வா ஏற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 118 நாட்களில் நிறைவடைந்துள்ளது. 

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம எப்போது வெளியாகும் என்ற கேள்வியும் எழுந்தது.

இதனிடையே கடந்த சில தினங்களாக தங்கலான் படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தங்கலான் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் ஒரு பாம்பை முறுக்கி இரண்டு துண்டுகளாக மாற்றிய விக்ரமுக்கு வசனங்கள் இல்லாத நிலையில், டிரெய்லரில் அவருக்கு வசனங்கள் கம்பீரமாக உள்ளது. அதேபோல் அந்த சூனியக்காரன் யார் என்று கேட்கும் ஒரு கேள்விக்கு சூனியக்காரன் இல்லை சூனியக்காரி என்று கூறுகிறார்.

Advertisment
Advertisements

இதன் மூலம் படத்தில் பெண் தான் மெயின் வில்லியாக இருப்பாரோ அவர் மாளவிகா மோகன் தானா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, இரத்தம் தெறிக்கும் காட்சிகள், சைரன்கள் கத்துவது மற்றும் மக்கள் படுகொலை செய்யப்படுவது போன்ற கொடூரமான காட்சிகள் டிரெல்ர் முழுவதும் நிறைந்திருக்கிறது.

மேலும், விக்ரமின் வித்தியாசமான தோற்றமும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும், போர் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த டிரெய்லரிலும் படத்தின் வெளியீடு தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vikram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: