Advertisment

சன்டிவி சீரியலில் நடிகர் விமல்... இதுவரை வெளிவராத புகைப்படங்கள்

Tamil Cinema Update : நடிகர் விமல் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தில், மீனாட்சி சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சன்டிவி சீரியலில் நடிகர் விமல்... இதுவரை வெளிவராத புகைப்படங்கள்

Tamil Cinema Actor Vimal IN Suntv Serial : தமிழ் சினிமாவில், கடந்த 2001-ம் ஆண்டு வெளியாக கலகலப்பு படத்தில் சிறிய வேடத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் விமல். தொடர்ந்து கில்லி படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்த இவர், தொடர்ந்து கிரீடம், குருவி உள்ளிட்ட படங்களில் நாயகனின் நண்பனாக நடித்திருந்தார். இப்படி பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்த விமல் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

Advertisment

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், மீனாட்சி சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருக்கு விஜய் அவார்ட் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து களவானி தூங்கா நகரம், வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.

கடைசியாக விமல் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு கன்னிராசி என்ற படம் வெளியானது. அதற்கு முன்பு சில தோல்வி படங்களை கொடுத்த விமலின் மார்கெட் சரிவை சந்தித்து. இதனால் அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த வாரம் விமல் நடிப்பில் விலங்கு என்ற வெப் தொடர் வெளியானது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் தற்போது விமலின் மார்கெட் உயர்ந்துள்ள நிலையில், விமல் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சன்டிவி சீரியலில் நடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 90- கிட்ஸ்களுக்கு பிடித்தமான சீரியல்களின் ஒன்றாக சித்தி சீரியலில் விமல் நடித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான இந்த தொடரில் நடிகை ராதிகா முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.

publive-image

இந்நிலையில், தற்போது சித்தி தொடரில் விமல் நடித்த காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vimal Suntv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment