பொதுவாக சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த நடிகர்கள் பின்னாளில், ஹீரோ அல்லது முக்கிய கேரக்டர்களில் நடிக்கும்போது அந்த படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர் என்ற ஆச்சரயமான கேள்வி எழும். அதே சமயம், ஒரு சிலர், குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன்பிறகு வாய்ப்பு இல்லாமல் வேறு துறைகளில் தங்களை நிலைநிறுத்திக்கொள்வார்கள். ஆனாலும் குழந்தை நட்சத்திரம் பெரிய நடிகராக வளரும்போது வில்லனாக நடித்தால் ஆச்சரியமாக இருக்கும்.
Advertisment
அந்த வகையிலான ஒரு நடிகர் தான், வினோத். பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படத்தில் இளம் சூர்யாவாக தனது அப்பாவையே அடித்து கொலை செய்யும் கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. வினோத் கிஷான் என்று பெயர் கொண்ட இவர், நந்தா படத்தில் நடித்தது போலவே டெரர் கேரக்டரில் நடித்த படம் தான் சமஸ்தானம். இதில் இளம் ஆஷிஷ் வித்யார்த்தியாக நடித்திருந்தார்,
அதேபோல் சத்யராஜ் நடித்த சேனா படத்தில் சிறுவயது சத்யராஜ் கேரக்டரில் நடித்திருந்த வினோத் கிஷான், 2007-ம் ஆண்டு கிரீடம் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 3 ஆண்டுகள் இடைவெளியில் வெளியான நான் மகான் அல்ல என்ற படத்தில் கொடூர வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
நான் மகான் அல்ல படத்தில் வினோத் கிஷான்
Advertisment
Advertisements
நந்தா படம் போலவே இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்கள், என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்திருந்த இவர், 2020-ம் ஆண்டு வெளியான அடவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து அர்ஜூன் தாஸூடன் அந்தகாரம், தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2024-ம் ஆண்டு கொஞ்சம் பேசினால் என்ன என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வினோத் கிஷான், அதே ஆண்டு தி அக்காளி, என்ற படத்தில் நடித்தார். கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இவர், பிகாமேடலு என்ற படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். காமெடி கதையாக வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சூர்யா படத்தில் அறிமுகமாகி, அவரது தம்பி கார்த்தி படத்தில் கொடூர வில்லனாகி தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ளார் வினோத் கிஷான்.