Advertisment

ரத்னம் படத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து : படத்தின் வெளியீட்டை தடுப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு ஆடியோ

தனது ரத்னம் படத்திற்கும் பிரச்சனை வரலாம் என்று விஷால் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
ratnam Vishal

நடிகர் விஷால்

நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படமான ரத்னம் நாளை வெளியாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் படத்தின் வெளியீடு குறித்து கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஸ்பீடு இயக்குனர் என்று அழைக்கப்படும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ரத்னம். இவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த்தால் ரத்னம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த படம் ஏப்ரல் 26 (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக விஷால் குற்றம் சாட்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விஷால் அளித்த ஒரு பேட்டியில், தனது மார்க் ஆண்டனி திரைப்படத்தை வெளியிட கூடாது என்று தனக்கு மிரட்டல் வந்ததாக கூறியிருந்த நிலையில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை கடுமையாக சாடியிருந்தார்.

அதேபேட்டியில் தனது ரத்னம் படத்திற்கும் பிரச்சனை வரலாம் என்று விஷால் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள ஆடியோவில், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஏரியாவில் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள். இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து. ரத்தமும் வியர்வையும் சிந்தி இந்த படத்தில் நடித்திருக்கிறேன். என்து நண்பர்கள் இந்த படத்தை வாங்கி வெளியிடுகின்றனர்.

கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என்று கடிதம் கொடுத்துவிட்டார்கள் என படத்திற்கு தடை விதிப்பது சரியல்ல. படத்திற்கு சம்பந்தம் இல்லாத ஒரு நபர் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் கொடுத்தால் படத்தை முடக்குவீர்களா? காலையில் இருந்து உங்களை தொடர்கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் வெயிட்டிங்கிலேயே வைத்திருக்கிறீர்கள்.

பண்ணுங்க எவ்வளவு பண்ண முடியுமோ பண்ணுங்க. விஷாலுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சாதாரண நடிகர்களின் நிலை எப்படி இருக்கும் என்று தமிழ் சினிமா தெரிந்துகொள்ளட்டும் என்று பேசியுள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment