Advertisment

அவதூறு பரப்பும் லைகா... எனது பட வாய்ப்பை தடுக்க முயற்சி : நடிகர் விஷால் குற்றச்சாட்டு

கடன் தொகை முடியும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் அனைத்து படங்களின் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
Vishal New

நடிகர் விஷால்

கடனை திரும்பி செலுத்தவில்லை என்று கூறி தனக்கான பட வாய்ப்புகளை லைகா நிறுவனம் தடுக்க நினைப்பதாக நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது திரைத்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் தற்போது பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா நிறுவனம், விஷால் நடிப்பில் வெளியாக சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விநியோக உரிமையை பெற்றிருந்தது. இதனிடையே விஷால் தனது தயாரிப்பு நிறுவனதமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக, சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 21.29 கோடி கடனாக பெற்றுள்ளார்.

இந்த கடனை தங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்த லைகா நிறுவனம், அதன்படி கடன் தொகையை செலுத்தியது. அதே சமயம் இந்த கடன் தொகை முடியும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் அனைத்து படங்களின் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறிய விஷால் தனது வீரமே வாகை சூடும் படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம் விஷால் தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை தராமல் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணையின்போது, இந்த மனுவுக்கு பதில் அளிக்க அவசாகம் தரும்படி விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பணத்தை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாகவும், லைகா நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது.

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த சண்டக்கோழி 2 படத்தில் விநியோக உரிமையை, 23.21 கோடிக்கு பெற்ற லைகா நிறுவனம் அதற்காக ஜி.எஸ்.டி தொகையை செலுத்தவில்லை இதனால், அபராதத்துடன் சேர்த்து, 4.88 கோடி விஷால் பிலிம் பேக்டரி சார்பாக நான் செலுத்தினேன். இதனால் லைகா நிறுவனத்தின், 5.24 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க வேண்டும் என்று விஷால் தரப்பு மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 19-ந் தேதிக்குள் (இன்று) லைகா நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பெற்ற கடனை திரும்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் என்மீது அவதூறு பரப்பி, எனக்காக பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது. என்னிடம் இருந்து பெற்ற தொகையை லைகா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை. லைகா தவிர வேறு எந்த நிறுவனத்திடமும் நான் கடன் பாக்கி வைக்கவில்லை. எனக்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே நடந்த பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய, நீதிமன்றம் தனி தணிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment