நான் போன் செய்தாலே இவன் காசுதான் கேட்பான் என்று நினைத்து என் ந்ண்பர்கள் யாரும் என் போனே எடுக்கமாட்டார்கள் என்று நடிகர் விஷால் உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம், மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.
இதனிடையே சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற 26-வது லைன்ஸ் க்ளாப் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் உருக்கமாக பேசியுள்ளார். இதில், இல்லாதவர்களுக்கு லைன்ஸ் க்ளப் மருத்துவ உதவி செய்வது குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் இந்த மேடை ஏறியதால் சிறப்பு விருந்தினர் கிடையாது. மருத்துவர்கள் பணியாளர்கள் தான் சிறப்பு விருந்தினர்.
10 ரூபாய்க்கு ரத்த பரிசோதனை என்பது சாதாரண விஷயம் அல்ல, நான் வெளியில் போய் சொன்னால் கூட பைத்தியக்காரத்தனமாக பேசாத இது எங்கே நடக்குது என்று கேட்பார்கள். இதை அனைவருக்கும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதால் தான் என் முகத்தை பயன்படுத்திக்கொள்ள இங்கு வந்திருக்கிறேன். இதற்கு பலரும் நிதியுதவி செய்கிறார்கள். ஒரே நாளில் ஒன்னறை லட்சம், ஃபண்ட் தயார் செய்வது சாதாரண விஷயம் அல்ல.
இதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தெரியாத ஒரு பெற்றோர்களுக்கு உதவி செய்து, ஒரே நாளில் பலருக்கும் வாழ்க்கை கொடுக்கிறார்கள். மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவி பெற எங்கு போய் என்ன செய்வது என்று தெரியாமல் தமிழ்நாட்டில் பலபேர் இருக்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு எனது சமூகவலைதள பக்கத்தில் இது குறித்து பதிவிடுவேன். வாழ்நாளில் என்ன புன்னியம் செய்திருக்கிறோம் என்ன பாவம் செய்திருக்கிறோம் என்பது முக்கியம்.
நம் வாழ்வில் அதிகமாக புன்னியம் செய்ய வேண்டும். நான் போன் செய்தால் பலமுறை என் நண்பர்கள் பயந்து பயந்து என் போன் காலை எடுக்கமாட்டார்கள். இவன் கண்டிப்பா ட்ரஸ்ட்க்கு காஸ்தான் கேட்பான் அதனால் எடுக்க வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“