சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படத்தில் விஷால் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து விஷால் பதில் அளித்ததுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியான அமரன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து ரூ300 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நாய் பல்லவி நாயகியாக நடித்திருந்தார். கமல்ஹாசன் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ். இசையமைத்திருந்தார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ந் தேதி வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள படம குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில, அவர் அடுத்து சூரரை போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஷாலிடம பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷால், கண்டிப்பாக நான் வில்லனாக நடிக்கப்போவதில்லை. நான் அடுத்து கமிட் ஆகியுள்ள படத்தில் நடிக்க போகிறேன். நான் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற விமர்சனம் எங்கிருந்து வந்திருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் இந்த நிலைக்கு வர 20 வருடங்கள் கடின உழைப்பை போட்டிருக்கிறேன். வில்லனாக நடிக்க நான் இப்போது தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜயின் லியோ படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலிடம் கதை கூறியதாகவும், இதற்கு சம்மதம் தெரிவித்த விஷால், கடைசியில், தவிர்க்க முடியாத காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது தான் வில்லன் கேரக்டரில் நடிக்கப்போவதில்லை என்று விஷால் உறுதியாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் வில்லன் கேரக்டரில் நடிக்கப்போவதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“