/tamil-ie/media/media_files/uploads/2023/01/Vishal.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தனது நெஞ்சில் முன்னாள் தமிழக முதல்வரின் படத்தை டாட்டூ குத்தியிருப்பது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகரும் இயக்குனருமான அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த விஷால், 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து திமிரு, சண்டைக்கோழி என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார். மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஷால் வி.எஃப்.விஎஃப் (VFF) என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்தும் வருகிறார்
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான லத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் துப்பாறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் விஷால் அவ்வப்போது பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் வாரணாசி காசி கோவில் குறித்து விஷால் வெளியிட்ட பதிவுக்கு பிரதமர் மோடி பதில் ட்விட் செய்திருந்தார். இதனிடையே விஷால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவ வருகிறது. சினிமா மட்டுமல்லாமல் அரசியல் ஆர்வத்திலும் இருக்கும் விஷால், கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயன்றார். ஆனால் சில காரணங்களால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
Actor Vishal gets a tattoo of Legendary Leader #MGR on his chest @VishalKOfficial is an ardent fan & follower of the former #ChiefMinister of Tamil Nadu pic.twitter.com/xkkA5J4N1b
— Ramesh Bala (@rameshlaus) January 24, 2023
இந்நிலையில், தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனது தடத்தை வலுவாக பதிவு செய்துள்ள எம்.ஜி,ஆர் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு அரசியல் ஆர்வத்தின் முன்னோடியாக இருந்து வருகிறார். மறைந்துவிட்டாலும் மக்கள் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எம்.ஜி.ஆர் முகத்தை விஷால் தனது நெஞ்சில் டாட்டூ குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ரமேஷ் பாலா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us