ரஜினிகாந்துடன் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்துடன் சூப்பர் ஸ்டார் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் அவர் அதை எடிட் செய்துள்ளார்.
2009-ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வென்னிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால், துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முன்டாசுப்பட்டி, மாவீரன் கிட்டு, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், தற்போது மோகன்தாஸ், ஆர்யன், லால் சலாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுடன் நடிகர் விக்ராந்த் நடித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு லால் சலாம் படம் வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/C6dxIo0GuVNQ4Q7REebp.jpg)
சமீப காலமாக ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ஹூகூம் பாடலில், பட்டத்தை பறிக்க 100 பேரு என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் அந்த படத்தின் இசைய வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா கழுகு கதை பெரும் விவாதத்தை எழுப்பிய நிலையில், ரஜினிகாந்த் விஜயைதான் குறிப்பிடுகிறார் என்று இணையத்தில் வேகமாக பரவியது.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழாவில், தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் என்று கூறிய விஜய் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது விஷ்ணு விஷால் வெளியிட்ட ஒரு பதிவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ரஜினியுடன் லால் சலாம் படத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால்,நேற்று தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் அமீர்கானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘’சூப்பர் ஸ்டார் ஆர் சூப்பர்ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், தனது பதிவை திருத்திய விஷ்ணு விஷால், ‘’ஸ்டார் ஆர் ஸ்டார் ஃபார் எ ரீசன்’’ என்று மாற்றியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“