தனது நகைச்சுவை நடிப்பின் மூலம், வெகுஜன மக்களின் இதயங்களை தொட்டு கலைவாணருக்கு அடுத்தபடியாக சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நடிகர் விவேக், தான் 2-ம் வகுப்பு படிக்கும்போதே, இப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, கடிதத்தின் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல, இதற்கு இந்திரா காந்தியும் பதில் அளித்து கடிதம் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
கே.பாலச்சந்தர் இயக்கத்தில், வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விவேக். அதன்பிறகு புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு, இரு வாசல் என கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தொடர்ந்து 3 படங்கள் நடித்த விவேக், அதற்கு பின் மற்ற நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கினார். காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக, தன்னை நிலை நிறுத்திக்கொண்ட விவேக், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
காமெடியில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கூறியவர் என்.எஸ்.கிருஷ்ணன். அவருக்கு அடுத்து சமூக சீர்திருத்த காமெடியில் உச்சம் தொட்டவர் தான் விவேக். என்.எஸ்.கிருஷ்ணன் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட நிலையில், விவேக் மக்கள் மத்தியில் சின்ன கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். படங்களின் மூலம் மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு நல்லதை எடுத்து சொன்ன, விவேக், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் இணைந்து, மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவேக், அடுத்த இரு தினங்களில் திடீரென மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் தற்போதுவரை ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்று சொல்லலாம். அவருடன் பணியாற்றிய பலரும் அவர் குறித்து நினைவுகளை பகிர்ந்து வரும் நிலையில், விவேக் பேட்டி அளித்த வீடியோக்களை யூடியூப்பில் ஷாட்ஸ்ஆகா டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ கிடைத்துள்ளது,
Advertisment
Advertisements
நடிகர் விவேக், தான் 2-ம் வகுப்பு படிக்கும்போது முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விவேக், நீலகிரி மாவட்டத்தின் குன்னூரை அடுத்த, ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜயா ஜூனியர் பள்ளியில் 2-ம் வகுப்பு படிந்து வந்தார். அப்போது, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்திக்கும் தனக்கும் ஒரே நாளில் பிறந்த தினம் என்பதை தெரிந்துகொண்ட அவர், அந்த நாளில், இந்திரா காந்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பாரத பிரதமரான இந்திரா காந்திக்கு, வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் “My Birthday Your Birthday Same Birthday, I Wish You, You Wish Me" என்று எழுதியுள்ளார்.
நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில், 2-ம் வகுப்பு படிக்கும் போது, யாருக்கோ லெட்டர் எழுதுனீங்களாமே என்று சுஹாசினி கேட்க, என் மாமன் பொண்ணுக்கு, பண்டித் ஜகவர்லால் நேரு எல்லோருக்கும் மாமா தானே அவரோட பொண்ணு எனக்கு மாமன் பொண்ணு தானே அவருக்கு தான் கடிதம் எழுதினேன். அந்த கடிதம் எழுதியதை மறந்து, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ராணுவ வீரர்கள் குதிரையில் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை தேடினார்கள்.
நான் பயத்தில் ஓடிபோய் பேரிக்காய் தொட்டத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டேன். அதன்பிறகு இந்திராகாந்தி அம்மாவிடம் இருந்து உஎனக்கு லெட்டர் வந்திருக்கிறது அதை கொடுக்கத்தான் வந்துருக்காங்க என்று சொன்னபோது தான், அதை வாங்கினேன். அதில் அவர் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி கூறி எழுதியிருந்தார் என்று விவேக் கூறியுள்ளார்.