நயன்தாரா தனது முகத்தில் கால் வைப்பது போன்ற காட்சிக்கு அவர் தயக்கம் காட்டியதாகவும், உடன் நடித்த சரண்யா பொன்வண்ணன் கூட இந்த காட்சி வேண்டாம் என்று கூறியதாகவும், 8 காட்சி 8 டேக் வரை சென்றதாகவும், நடிகர் யோகி பாபு ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சினிமா விகடன் உடனான ஒரு நேர்காணலில், யோகி பாபு, நயன்தாராவின் அர்ப்பணிப்பையும், படப்பிடிப்பு தளத்தில் அவர் வெளிப்படுத்திய கண்ணியமான நடத்தையையும் வெகுவாகப் பாராட்டினார். "அவர் நிஜமாகவே ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தான். என்னைப் போன்ற ஒரு நகைச்சுவை நடிகருடன் நடிப்பதே பெரிய விஷயம். ஒரு காட்சியில் கார் ஸ்பீட் பிரேக்கரில் ஏறும் போது, நயன்தாராவின் கால் என் முகத்தில் பட வேண்டும். ஆனால் நயன்தாரா அந்தக் காட்சியைச் செய்யவே மறுத்துவிட்டார்.
இயக்குநர் நெல்சன் மற்றும் நான் அந்தக் காட்சி சிறப்பாக இருக்கும் என்று உணர்ந்தோம். மூத்த நடிகை சரண்யா மேடம் கூட அந்த காட்சி அவசியமில்லை என்று சொன்னார். ஆனாலும் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஏழு அல்லது 8 டேக்குகள் எடுக்கப்பட்டது, ஆனால் ஒரு முறை கூட அவர் தன் காலை என் முகத்தில் வைக்கவில்லை. என் முகத்தில் ஒரு சிறு அழுக்கு கூட படாமல் இருக்க, அவர் வாஸ்லின் தடவிக்கொண்டு தன் காலை தரையில் வைக்காமல் தூக்கியே வைத்திருந்தார். இதுதான் நயன்தாரா போன்ற ஒரு சிந்தனைமிக்க நடிகையின் அடையாளம் என்று கூறியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம், நயன்தாராவின் நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் வெளியாகி, அவரது வாழ்க்கையின் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப் படம் பின்னர் 2022 இல் ஜான்வி கபூர் நடிப்பில் 'குட் லக் ஜெர்ரி' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் அது அசல் படத்தின் வெற்றியைப் பெறவில்லை. நயன்தாரா தற்போது மலையாளத்தில், நிவின் பாலியுடன் இணைந்து நடித்த மலையாளப் படமான 'டியர் ஸ்டூடென்ட்ஸ்' படப்பிடிப்பை முடித்துள்ளார்.
அண்மையில் வெளியான சித்தார்த், ஆர். மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் உருவான 'டெஸ்ட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.