/indian-express-tamil/media/media_files/9iOL9BtfLCqFQslceO2S.jpg)
விஷால் - அஜித் - சூர்யா
மறைந்த முன்னாள் முதல்வரும், திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெறும் கலைஞர் 100 நிகழ்ச்சியில், அஜித், சூர்யா, விஷால் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (ஜனவரி 6) சென்னையில் கலைஞர் 100 என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திரைத்துறையின் சார்பில், இயக்குனர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பல பங்கேற்கவுள்ளனர்.
குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டோர் கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாடியஅஜீத், சூர்யா மற்றும் விஷால் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சென்னை திரும்பிய அஜித், விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திறங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு தனது மும்பை இல்லத்திற்கு திரும்பிய சூர்யா, இன்று சென்னை திரும்பிய நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். அதேபோல் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் விஷால் 'கலைஞர் 100' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இதனிடையே 'கலைஞர் 100' இல் கலந்து கொள்ள முடியாத முக்கிய பிரமுகர்களில் ஒருவராக சிலம்பரசன் மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கு நேர்மாறான சூழ்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளத் தவறிய சினிமா நட்சத்திரங்கள், வரவிருக்கும் 'கலைஞர் 100' நிகழ்வு விஜயகாந்த் இறுதிச்சடங்கு இரண்டிலும் கலந்து கொள்ளாததற்காக சமூக ஊடக விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், பல்வேறு ஆன்லைன் தளங்களில் நெட்டிசன்கள் இந்த நட்சத்திரங்களை கேலி செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.