Advertisment

90-களில் முன்னணி நடிகை: இப்போ சீரியலில் சிறப்பு தோற்றம்; நடிகை கௌசல்யா ரீசன்ட் க்ளிக்ஸ்!

90 களில் முன்னணி நடிகையாக இருந்த கௌசல்யாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Koo
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

1996-ம் ஆண்டு ஏப்ரல் 19 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை கௌசல்யா, 1997-ம் ஆண்டு தமிழில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றியாக அமைந்தது. இந்த படத்தின் பாடல்கள் இன்றுவரை காதலர்களின் முக்கிய பாடல்களாக இருந்து வருகிறது. அடுத்து நேருக்கு நேர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் வெற்றியாக அமைந்தது.

Advertisment

publive-image

தொடர்ந்து, ஜாலி, பிரியமுடன், சொல்லாமலே, பூவேலி, சந்தித்த வேளை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த கௌசல்யா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இதில் தமிழில் பூவேலி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றிருந்தார். கடைசியாக தமிழில் சான்றிதழ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்த கௌசல்யா விஜய் நடித்த திருமலை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தருந்தார். அதன்பிறகு சந்தோஷ் சுப்ரமணியம், பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதில் சங்கிலி புங்கிலி கதவை திற என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது சன்டிவியின் சுந்தரி சீரியலில் சிறப்பு தொற்றத்தில் நடித்து வரும் கௌசல்யா, மலையாளத்தில் குர்பானி என்ற படத்தில் நடித்துள்ளார்.

publive-image

இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் - ரோஹித் மேனன் திருமண நிகழ்ச்சியில் கௌசல்யா கலந்துகொண்டார் சக நடிகைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், நடிகை கௌசல்யா அப்போது இருந்த அதே மாதிரியே இளமையாகவே இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment