scorecardresearch

கலாஷேத்ரா சர்ச்சையில் அரசியல்… ஹரி பத்மன் நல்லவர்… நடிகை அபிராமி அதிரடி

கலாஷேத்ரா விவகாரம் குறித்து நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

kalakshetra
கலாஷேத்ரா

கலாஷேத்ரா விவகாரத்தில் அங்கு அரசியல் நடக்கிறது. நான் படித்த கல்லூரி என்பதால் முன்னாள் மாணவியாக எனது ஆதரவை நான் தெரிவித்தேன் என்று நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மயூர் பகுதியில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் கலைக்கல்லூரியில், பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மீது கல்லூரி மாணவிகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை அபிராமி வெங்கடாச்சலம், கலாக்ஷேத்ராவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. “நான் கலாக்ஷேத்ரா முன்னாள் மாணவி. கதையின் ஒரு பக்கத்தை மட்டும் நாம் ஒருபோதும் பார்க்கக்கூடாது என்பதால், இது குறித்து கருத்து தெரிவிக்க எனக்கு ஆர்வம் இல்லை. கதையின் ஒரு பக்கத்தை மட்டும் தெரிந்துகொண்டு, மக்கள் பலவிதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

அபிராமியின் இந்த கருத்து இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்ய தொடங்கியதால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கலாஷேத்ரா விவகாரம் குறித்து நடிகை அபிராமி வெங்கடாச்சலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது தற்போது இணையத்தில் வைரலராகி வருகிறது.

இது குறித்து அவர் பேசுகையில்,

கலாஷேத்ரா விவகாரம் குறித்து இணையத்தில் பரவும் செய்திகள் என்னை கவலையடைய செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் மீது மாணவிகள் இவ்வளவு நாட்களாக புகார் செய்யாதது ஏன்? ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர். கலாஷேத்ராவில் இருந்து என்னை தொடர்புகொண்ட ஒருவர் ஹரி பத்மனுக்கு எதிராக பேசும்படி என்னிடம் கூறினார்.

எனக்கு வகுப்பு எடுத்தவரை ஹரிபத்மன் எந்தவித தொல்லையும் கொடுத்ததில்லை. இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா பள்ளி மாணவிகள் தான் பலியாடாக ஆக்கப்படுகிறார்கள். ஹரிபத்மனுக்கு எதிராக பேச சொல்லி மாணவிகளை நிர்மலா, நந்தினி போன்ற ஆசிரியர்கள் தூண்டிவிடுகின்றனர். கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தின் பின்னணியில் அரசியல் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 10 வருடங்களாக இந்த தொல்லைகள் நடைபெற்று வருதாக கூறுகிறார்கள். இதே 10 வருடங்களுக்கு முன்புதான் நானும் இந்த கல்லூரியில் படித்தேன். நாங்கள் படிக்கும்போதே ஒருவர் மீது இதுபோன்ற பாலியல் புகார் வந்தது. அப்போது நாங்கள் அது பொய் என்று நிரூபித்து அவரை மீண்டும் கொண்டு வந்தோம். இப்போது அதே இடத்தில் ஹரி பத்மன் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress abirami venkatachalam press meet about kalakshetra issue