கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ஷங்கர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.


தனது அறிமுக படமாக விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடியதன் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் மாவீரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் விருமன் படம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil