ஷங்கர் படைத்த பிரமாண்டம்: இளவரசி 'லுக்'-ல் அதிதி ஷங்கர் கூல் க்ளிக்ஸ்

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அதிதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அதிதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Aditi shankr

அதிதி ஷங்கர்

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் முதல் படத்திலேயே பாடகியாகவும் முத்திரை பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து தற்போது அவருக்கு படவாய்ப்பு குவிந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்துள்ள மாவீரன் படம் வரும் ஜூலை மாதம் வெளியாக உள்ளது. அதன்பிறகு இயக்குனர் விஷ்னுவர்த்தன் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சிம்புவின் கொரோனா குமார் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அதிதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிதி சங்கர் ராணி வேடத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில், பலரும் இதயம் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: