தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் இளைய மகள் அதிதி. மருத்துவம் படித்துள்ள இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Advertisment
இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடியாக நடித்த அதிதி மதுரைவீரன் பாடல் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமானார். இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
அதோடு மட்டுமல்லாமல் மேடைகளில் கடி ஜோக் சொல்லி பிரபலமான இவர் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் சினிமாவில் வாய்ப்புக்காக அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அதிதி.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவ்வப்போது நேர்காணல் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிதி மதுரை வீரன் பாடலை பாடி அசத்தி வருகிறார்.