தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Advertisment
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதிதிக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. ஷங்கரின் மகள் இந்த படத்தின் நாயகி என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மேலும் தனது முதல் படமான விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடி முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமானவர் அதிதி சங்கர். ஆனால் விருமன் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதோடு மட்டுமல்லாமல் அதிதி இந்த படத்தில் புதிதாக எதுவும் செய்யவில்லை. அவருக்கு படத்தில் அதிகம் ஸ்கோப் இல்லை என்று விமர்சனங்கள் வந்தது. மாவீரன் படத்திலும் அதிதி ஒரு பாடலை பாடியிருந்தார்.
முதல் 2 படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், 7ஜி ரெய்ன்போ காலனி படத்தில் 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதிதி அடுத்து சிம்பு ஜோடியாக கொரோனா குமார் படத்திலும், விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதே சமயம் இயக்குனரின் மகள் என்பதால் அவருக்கு பட வாய்ப்பு வருவதாகவும் பேசப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“