3-ம் தலைமுறை வாரிசு நடிகை ரெடி: இவங்க பாட்டி எப்பேர்பட்ட நடிகை!

Tamil News Update : பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளாக ஐஸ்வர்யா தனது மகளுடன் இணைந்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Tamil Cinema Actress Aishwarya Baskar Update : தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் மற்றும் நடிகைகளின் வரவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அங்கிகாரம் பெற்றவர் நடிகை லட்சுமி. பழம்பெரும் பழம்பெரும் நடிகையான இவர், கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குநர் விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’. படத்தில் அவரது மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றார்.

தொடர்ந்து 100 படங்களுக்கு மேல் நடித்து புகழ் பெற்ற இவர், 1969ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த லட்சுமி, 2-வதாக 1975ல் மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். 5 வருடத்தில் இவரையும் விவாகரத்து செய்தார் லட்சுமி.

அதன்பிறகு ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ் சிவா சந்திரனுடன் திருமணம் செய்துகொண்டார். இதில் முதல் கணவருக்கு பிறந்தவர்தான் நடிகை நடிகை ஐஸ்வர்யா. இவர் தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான ஞாயங்கள் ஜெயிக்கப்பட்டும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் அதன் பின்னர் மீரா, உள்ளே வெளியே, எஜமான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா கடந்த 1994 ஆம் ஆண்டு தன்வீர் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு 1995 ஆம் ஆண்டு மகள் பிறந்தார். ஆனால் ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக இருவருடஙகளில் தனது கணவரை பிரிந்தார். அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாத இவர், தொடர்ந்து படங்களில் நடித்து நிலையில் முதன் முறையாக தனது மகளுடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என்று ஆச்சரியமடைந்து வருகி்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress aishwarya baskar daughter viral video

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com