2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிஜன்டுகல்லுடே நட்டில் ஒரிடுவா என்ற படத்தின் மூலம் திரைத்தறையில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
Advertisment
தொடர்ந்து மாயநதி, வரதன், பிரதர்ஸ்டே உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Advertisment
Advertisements
அதன்பிறகு தனுஷ்க்கு ஜோடியாக ஜகமே தந்திரம் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்த இவர், கார்க்கி, கேப்டன், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
மேலும் இந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி, நடிப்பில் சமீபத்தில் வெளியா கட்டா குஸ்தி படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பெண்கள் குத்துச்சண்டையை மையமாக வைத்து வெளியாகியுள்ள கட்டா குஸ்தி படம் நாயகிக்கு முக்கியத்தவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மம்முட்டியுடன் கிரிஸ்டோபர், அவரது மகன் துல்கர் சல்மானுடன் கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர், கோட் சூட்டுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil