scorecardresearch

விஜய் பட நடிகருடன் காதலில் விழுந்த பூங்குழலி?

2019-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாக ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி

விஜய் பட நடிகருடன் காதலில் விழுந்த பூங்குழலி?

பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கைதி பட நடிகரை காதலிப்பதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நிஜன்டுகலுடே நாட்டில் ஓரிடவேளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. மருத்துவம் படித்துள்ள இவர், தொடர்ந்து மாயநதி, வரதன், பிரதர்ஸ் டே உள்ளிட்ட சில மலையாளப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு 2019-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாக ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ஜகமே தந்திரம், புத்தம்புது காலை விடியாதா கார்க்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியில் செல்வன் படத்தில் நடித்த பூங்குழலி கேரக்டருக்காக பாராட்டுக்களை பெற்றார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது ஐஸ்வர்ய லட்சுமி பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் நடித்த நடிகர் அர்ஜுன் தாஸ்-உடன் ஐஸ்வர்ய லட்சுமி நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில், ஹார்ட்டின் ஸ்மைலியை பகிர்ந்து தங்களில் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. பலர் இதற்கு பாராட்டுக்களை தெரிவித்தும் வாழ்த்துக்களை கூறியும் வருகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress aishwarya lakshmi photo with actor arjun dass