என்னையே தொலைத்து விட்டேன், இனிமேல் முடியாது: இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிய ஐஸ்வர்யா லட்சுமி!

இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்ததாலும், சூரியின் மாமன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்ததாலும், சூரியின் மாமன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Aishwarya Lakshmi m

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்திருந்த நிலையில், சிறந்த சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

2019-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஐஸ்வர்யா லட்சுமி, அடுத்து தனுஷூடன் ஜகமே தந்திரம், ஆர்யாவின் கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், தக் லைஃப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான தக் லைஃப் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்ததாலும், சூரியின் மாமன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்து ஐஸ்வர்யா லட்சுமி கட்டா குஸ்தி 2 படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா லட்சுமி, சமூகவலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழமொழியுடன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு கலைத்துறையில் இருக்கும்போது சமூக ஊடகங்கள் மிகவும் தேவை என்று மிக நீண்ட நாட்களாக, நான் ஒரு விஷயத்தை நம்பி வந்தேன்.

காலத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும் என்றும் கருதினேன். ஆனால் ஒருகட்டத்தில் சமூக ஊடகங்கள் நமக்குக் கட்டுப்படாமல், அவை நம்மை ஆட்கொண்டன. அது எனது வேலைகளையும் ஆராய்ச்சிகளையும் கடுமையாக திசை திருப்பியது. என்னுடைய ஒவ்வொரு தனித்துவமான சிந்தனைகளையும் அது என்னிடமிருந்து எடுத்துவிட்டது. எனது மொழி மற்றும் சொற்களஞ்சியத்தைப் பாதித்தது. எல்லாவற்றையும், ஒரு எளிமையான இன்பத்தையும் பறித்தது.

Advertisment
Advertisements

இணையத்தின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் நான் அடிபணிய விரும்பவில்லை. ஒரு பெண்ணாக, சுயமரியாதை மற்றும் கட்டுப்பாட்டைப் பற்றி நிறைய பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதை எதிர்க்க நான் இன்னும் கடுமையாகப் போராடினேன். இது நான் சமீபத்தில் எடுத்த மிக முக்கியமான முடிவு. நான் இங்கே ஒரு ஆபத்தை உணர்கிறேன், அது மறக்கப்படுவதுதான். இன்றைய காலகட்டத்தில் 'இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினால், மனதிலிருந்தும் வெளியேறிவிடுவோம்' என்று கூறுவார்கள். எனவே, என் உள்ளிருக்கும் கலைஞருக்கும், சிறுமிக்கும் சரியானதைச் செய்கிறேன்.

Aishwarya Laksh

அவர்களை ஒரு தனித்துவமாக வைத்திருக்கிறேன். முழுமையான இணைய பழமையை நான் தேர்வு செய்கிறேன். வாழ்க்கையில் அதிக அர்த்தமுள்ள தொடர்புகளையும், சினிமாவை உருவாக்குவேன் என்று நம்புகிறேன். நான் நல்ல சினிமாவை உருவாக்கினால், பழைய பாணியில் எனக்கு அன்பு கொடுங்கள். அன்புடன், ஐஸ்வர்யா லட்சுமி" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

aishwarya lakshmi Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: