சிம்பு, பாலா வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ்: கண்ணீர் வடிக்கும் காமெடி நடிகருக்கு உதவி

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பிரபல காமெடி நடிகருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி செய்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பிரபல காமெடி நடிகருக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
simbu KPY Aishwarya ra
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் தனக்கு உடல்நிலை சரியில்லை, திரைத்துறையினர் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து முதல் ஆளாக நடிகர் சிம்பு நிதியுதவி செய்த நிலையில், அடுத்து சின்னத்திரை நடிகர் பாலா உதவி செய்தார். தற்போது அந்த வரிசையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார்..

Advertisment

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் வைகை புயல் வடிவேலு. இவரது காமெடி பட்டாளத்தில் முக்கிய நடிகராக இருந்தவர் வெங்கல் ராவ். ஒரு கட்டத்தில் வடிவேலுக்கு பட வாய்ப்பு குறைந்து சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த போது வெங்கல் ராவுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வடிவேலு ரீ-என்டரி ஆன நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

நாய் சேகர் ரி்ட்டன்ஸ் படம், இந்த படம் சரியாக போகாத நிலையில்வெங்கல் ராவ் குறித்து அதன்பிறகு வேறு எந்த தகவலும் இல்லை.இதனிடையே தற்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்று வீடியோ பதிவை வெளியிட்டுள்ள வெங்கல் ராவ்எனக்கு கைகால் விழுந்து போச்சுநடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்லபணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. சினிமா நடிகர் சங்கங்கள் எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியிருந்தார்.

vengal rao hoso

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, நேற்று நடிகர் சிம்பு, ரூ2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நடிகரும் சமூக சேவகருமான கே.பி.ஒய்.பாலா நடிகர் வெங்கல் ராவுக்கு ரூ1 லட்சம் நிதிவுதவி அளித்துள்ளார். எனக்கு பிடித்த நடிகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் அண்ணா உதவி கேட்டது என் மனதே கேட்கவில்லை. அதனால் என் சொந்தப்பணம் ரூ1 லட்சத்தை அவரிடம் கொடுத்திருக்கிறேன் நீங்கள் உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisment
Advertisements

தற்போது சிம்பு, கே.பி.ஒய்.பாலா வரிசையில், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் வெங்கல் ராவுக்கு ரூ25 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ள நிலையில், இதேபோல் பலரும் அவருக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் வெங்கல் ராவ் உடல்நலம் தேறி மீண்டும் நடிப்புக்கு வர வேண்டும் என்று வேண்டுதலும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Simbu KPY Bala Aishwarya Rajesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: