/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya.jpg)
ஐஸ்வர்யா ராஜேஷ்
1996-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரம்பத்து என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து நீதான அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420 அட்டக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-3.jpg)
2012-ம் ஆண்டு தமன்குமார் நடிப்பில் வெளியான ஆச்சரியங்கள் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-2.jpg)
இதில் காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-1.jpg)
அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா வட சென்னை படத்தின் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது நாயகிக்கு முக்கியத்தும் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-4.jpg)
இதில் திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரமுடன் இவர் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-5.jpg)
தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Aishwarya-6.jpg)
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.