1996-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரம்பத்து என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து நீதான அவன், அவர்களும் இவர்களும், உயர்திரு 420 அட்டக்கத்தி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

2012-ம் ஆண்டு தமன்குமார் நடிப்பில் வெளியான ஆச்சரியங்கள் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ் காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் காக்கா முட்டை திரைப்படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அதன்பிறகு ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா வட சென்னை
இதில் திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், விக்ரமுடன் இவர் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/