அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை: யார் இந்த அகிலா நாராயணன்?

Tamil Cinema Update ; தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், கலைத்துறையில் மீதுள்ள ஆர்வத்தினால் தனது சொந்த முயற்சியின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Tamil Cinema Update ; தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், கலைத்துறையில் மீதுள்ள ஆர்வத்தினால் தனது சொந்த முயற்சியின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை: யார் இந்த அகிலா நாராயணன்?

Tamil Cinema Actress Akila Narayanan Join American Army : இந்திய வம்சாவளியின் தமிழ் திரைப்பட நடிகையாக அகிலா நாராயணன் தற்போது அமெரிக்காவின் ஆயுதப்படையில் இணைந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியாக காதம்பரி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அகிலா நாராயணன். சமூக கருத்தை மையாமாக கொண்டு திகில் படமாக வெளியான இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அமெரிக்காவில் வாழும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், கலைத்துறையில் மீதுள்ள ஆர்வத்தினால் தனது சொந்த முயற்சியின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் இந்த படத்தில் நாயகி மட்டுமல்லாமல், பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். ஆனால் தற்போது தனது இவர் அமெரிக்க ராணுவத்தில் இணைந்துள்ளார். இதற்காக பல மாதங்களாக அமெரிக்க இராணுவப் போர்ப் பயிற்சியை பெற்ற அகிலா தற்போது வெற்றிகரமான தனது பயிற்சியை முடித்து அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.

மேலம் அமெரிக்க ராணுவ வீரர்களின் சட்ட ஆலோசகராக அகிலா நாராயணன் செயல்படுவார் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,அவர் தான் வாழும் நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் சேர்ந்துள்ளார். அகிலா அமெரிக்க இராணுவத்திற்கு சேவை செய்வதை தனது கடமையாக கருதுகிறார். மேலும் இவர் ராணுவத்தில் இணைவதற்கு இவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெயர் பெற்றுள்ளார்

Advertisment
Advertisements

மேலும் 'நைடிங்கேல் ஸ்கூல் ஆஃப் மியூசிக்' என்ற பெயரில் ஆன்லைன் இசை பள்ளியை நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இசைக் கலையை கற்றுக்கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்துவிட்டால் அடுத்து முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பல நடிகைகளுக்கு மத்தியில் தற்போது அகிலா நாராயணன் தனது வித்தியாசமான பயணத்தை தேர்வு செய்து பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: