Advertisment

சூப்பர் ஸ்டார் ஜோடி; டோலிவுட் ஸ்டாருடன் திருமணம்; இந்த அழகு நடிகையை அடையாளம் தெரிகிறதா?

சமூகவலைதளங்கள் அதிகம் பிரபலம் இல்லாத 80-90 காலக்கடத்தில் பத்திரிக்கைகள், வார இதழ்களில் மட்டுமே நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகும்.

author-image
WebDesk
New Update
Actress Amala

பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படம்

திரையுலகை பொருத்தவரை சிறிய கேரக்டரில் அறிமுகமாகி பின்னாளில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த பல நடிகைகள் உள்ளனர். தொடக்கத்தில் இவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றாலும் முன்னணி நடிகையாக மாறியபின் அவரது படங்கள் பெரும்பாலும் இணையத்தில் வரவேற்பை பெற்று வருவது இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது.

Advertisment

Amala Akkin

ஆனால் சமூகவலைதளங்கள் அதிகம் பிரபலம் இல்லாத 80-90 காலக்கடத்தில் பத்திரிக்கைகள், வார இதழ்களில் மட்டுமே நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகும். இதனால் அந்த காலக்கடத்தில் முன்னணி நடிகைளின் இளம் வயது அல்லது குழந்தை பருவ புகைப்படங்களை காண்பது மிகவும் அரிதான ஒரு செயலாக இருந்தது. ஆனால் சமூகவலைதளம் அசுர வளர்ச்சி பெற்று வரும் இந்த காலக்கடத்தில் நடிகைகளே தங்களது சமூகவலைதளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு நடிகை தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் பிறந்த இவர், டி.ராஜேந்தர் இயக்கிய படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Actress Amala a

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய சினிமாவில் பல படங்களில் நடித்துளள இந்த நடிகை 1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவர் வேறு யாரும் இல்லை நடிகை அமலா தான். 1986-ம் ஆண்டு வெளியான மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான அமலா கடைசியாக தமிழில் 1991-ல் வெளியான கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

Amala Akkin

1992-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட அமலாவுக்கு அகில் என்ற ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய அமலா 2012-ம் ஆண்டு முதல் மீண்டும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கணம் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்டரி ஆன நடிகை அமலாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரா இவர் அடையாளமே தெரியலையே என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment