Advertisment

நிறைமாத கர்ப்பிணியாக அமலா பால்... கோலாகமாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி : போட்டோஸ் வைரல்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Amala Paul Baby

அமலா பால்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பால்க்கு தற்போது வளைகாப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கேரளாவை பூர்விமாக கொண்ட அமலாபால் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பால்க்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. முதல் 2 படங்களில் பெரியதாக கவனம் ஈர்க்காத அமலா பால் மைனா படத்தின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ்ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயைகாதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்அடுத்த 2 மாதத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் இதற்காக அமலா பாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இருவீட்டார் முன்னிலையில் நடைபெற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், அமலா பால் தனது கணவருடன் கலர்ஃபுல்லான உடையில் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான ப்ரித்விராஜூவின் ஆடுஜீவிதம் படத்தில் அமலாபால் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

tamil cinema actress Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment