என்ன திடீர்னு இப்படி? முழு ஆன்மீகவாதியாக அமலாபால்!

Tamil Cinema Update : அமலாபால் தற்போது மலையாளத்தில் ஆடு ஜீவிதம், தமிழில் அதோ அந்த பறவைபோல மற்றும் காடவர் படத்தில் நடித்து வருகிறார்.

Tamil Cinema Amala Paul Viral Photo Update : தமிழ் சினிமாவில் தற்போது சோலோ நாயகியாக வலம் வருபவர் அமலாப்பால். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், இயக்குநர் சாமி இயக்கிய சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்து தமிழில் அறிமுகமானார். அந்த படத்தின் கதை சர்ச்சையை ஏற்படுத்தியதால, அமலா பால் யார் என்று தெரியாமல் போனது. ஆனால் அடுத்து இயக்குநர் பிரபுசாலமன் இயக்க்தில் விதார்த்துடன் இவர் நடித்த மைனா திரைப்படம்  இவருக்கு தனி அடையாளத்தை கொடுத்தது.

இந்த படம் பல விருதுகளை வாரி குவித்த நிலையில்,அமலாபால்-க்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. அதன்பிறகு தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இதரம்மயில்தோ என்ற படத்தில் அறிமுகமான இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தார். அதன்பிறகு தமிழில், விஜய், தனுஷ், ஜெயம்ரவி, தெலுங்கில் அல்லு அர்ஜூன், ராம்சரன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தலைவா படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜயுடன் காதலில் விழுந்த அமலாபால் அவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால திருமணமாகி சில வருடங்களில் விவாகரத்து பெற்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு நாயகர்களுடன் டூயட்பாடுவதை கைவிட்ட அமலாப்பால் சோலோ நாயகியாக களமிறங்கினார். அந்த வகையில் இவர் நடித்த அம்மா கணக்கு திரைப்படம் பலரது பாராட்டுக்களை பெற்றது.

ஆனால் அடுத்து இவர் நடித்த ஆடை திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாத அமலா பால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மலையாளத்தில் ஆடு ஜீவிதம், தமிழில் அதோ அந்த பறவைபோல மற்றும் காடவர் படத்தில் நடித்து வருகிறார். இதில் காடவர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அமலாபால், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அநத வகையில் இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் வைரலாக பரவிய நிலையில், தற்போது அமலாப்பால் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழுவதும் ஆன்மீகவாதியாக மாறியுள்ள அமலாபால், வட இந்தியாவில் கவுகாத்தியில் உள்ள பிரபல துர்கா கோவிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது கழுத்தில் மாலை, நெற்றில் சிகப்பு பட்டை, காவி உடை என பக்தியுடன் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைபபடம் தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress amala paul instagram photo viral on social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com