மைனா படத்தில் நடித்தபோது முத்த காட்சி சரியாக வராததால் 20 டேக் சென்றதாகவும், இதற்காக நடிகர் விதார்த்க்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
2009-ம் ஆண்டு வெளியான நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர் அமலா பால், தொடர்ந்து வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், சிந்து சமவெளி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அமலா பாலுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபுசாலமன் இயக்கிய இந்த படத்தில் விதார்த் நாயகனாக நடித்திருந்தார். மேலும் தம்பி ராமையாக முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மைனா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டி.இமான் இசையில் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்த படத்திற்கு பிறகு, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், உள்ளிட்ட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த அமலாபால் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடாவது படம் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மைனா படத்தின் நினைவுகளை பகிர்ந்துகொண்ட அமலாபால், இந்த படத்தில் ஒரு முத்த காட்சி 20 டேக் மேல் சென்றதாகவும் இதற்காக நடிகர் விதார்த்க்கு தனியாக பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந் படத்தின் ஒரு பாடலில் அமலாபால் முகத்திற்கு நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல் ஒரு காட்சி இருந்தது.
அந்த காட்சியை படமாக்கும்போது விதார்த் கூச்சமாக இருந்ததால் அமலாபாலின் முகத்திற்கு நெருக்கமாக செல்ல பயந்துள்ளார். ஆனாலும் இந்த காட்சி 20 டேக் மேல் சென்ற நிலையிலும் காட்சி சரியாக வராததால், கேமராவை ஆஃப் செய்துவிட்ட முத்த காட்சிக்காக நடிகர் விதார்த்க்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு படமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.