Advertisment

பிகினி உடையில் ஸ்ட்ராபரிக்கு முத்தம்... அமலாபால் வைரல் க்ளிக்ஸ்

2010-ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அமலா பாலுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

author-image
WebDesk
New Update
Amala Paul

நடிகை அமலாபால்

மைனா வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அமலாபால் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

2009-ம் ஆண்டு வெளியான நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். தொடர்ந்து வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

publive-image

தொடர்ந்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், சிந்து சமவெளி படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

publive-image

அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு வெளியான மைனா திரைப்படம் அமலா பாலுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பிரபுசாலமன் இயக்கிய இந்த படத்தில் விதார்த் நாயகனாக நடித்திருந்தார்.

publive-image

மேலும் தம்பி ராமையாக முக்கிய கேரக்டரில் நடித்திருந்த மைனா திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டி.இமான் இசையில் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றியை கொடுத்தது.

publive-image

இந்த படத்திற்கு பிறகு, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், உள்ளிட்ட நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த அமலாபால் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடாவது படம் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அமலாபால் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment