/indian-express-tamil/media/media_files/3kiAM8K6SeS3VVWl6Eyn.jpg)
தனது கணவருடன் நயன்தாரா
கர்ப்ப காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்து வரும் தனது கணவருக்கு நடிகை அமலாபால் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவை பூர்விமாக கொண்ட அமலாபால் வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தாலும்,பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலா பால்க்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. முதல் 2 படங்களில் பெரியதாக கவனம் ஈர்க்காத அமலா பால் மைனா படத்தின் மூலம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் தனுஷ்,ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்திருந்த அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜயைகாதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் ஜெகத் தேசாய் என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணம் தொடர்பானபுகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில்,அடுத்த 2 மாதத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் இதற்காக அமலா பாலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
தற்போது கர்ப்ப காலத்தில் தனக்கு ஆதரவாக இருந்த தனது கணவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள பதிவில், "என் பக்கத்தில் இருந்து தாமதமாக இரவை கழித்து, மெதுவாக என் அசௌகரியங்களைத் தணித்து, என் மீதான உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் என்னை வலிமையால் உருவாக்கிய உங்கள் உற்சாகமான வார்த்தைகளுக்கு நன்றி.
இந்த விலைமதிப்பற்ற பிரயாணத்தின் போது, என் நம்பிக்கை தளந்த சிறிய தருணங்களில் கூட என்னை ஆதரிப்பதற்கான உங்கள் விருப்பம் என் இதயத்தை நன்றியுடனும் அன்புடனும் நிரப்புகிறது. உங்களைப் போலவே நம்பமுடியாத அளவிற்கு எனது வலிமை, அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
அமலா பால் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த 'ஆடுஜீவிதம்' சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், ஆசிப் அலியின் வரவிருக்கும் த்ரில்லர் 'லெவல் கிராஸ்' படத்தில் அமலா பால் ஒரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.