Advertisment

80-களில் முன்னணி நடிகை : இப்போ சீரியல் பிரபலம் : இந்த குழந்தை யார் தெரியுமா?

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 1979-ம் ஆண்டு தமிழில்

author-image
WebDesk
New Update
Actress Ambika

முன்னணி நடிகை ஒருவர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொதுவாக முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பலரின் சிறுவயது புகைப்படங்கள் அடையாளம் தெரியாத வகையில் தான் இருக்கும். அந்த வகையில் 80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertisment

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 1979-ம் ஆண்டு தமிழில் வெளியான சக்காளத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நாயகி வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து, முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்து வரும் இவர், சின்னத்திரை சீரியல்களிலும் முக்கிய கேரக்டர்களில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த நடிகை யார் தெரியுமா? அவர் தான் நடிகை அம்பிகா. பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலின் அம்மாவாக நடித்திருந்த இவர், வாழ்க்கை என்ற படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்திருந்தார்.

ambika

தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அம்பிகா சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான நாயகி மற்றும் அருவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சன்டிவியின் மல்லி சீரியலில் சக நடிகைகளான பூர்ணிமா மற்றும் நளினி ஆகியோருடன் நடித்து வருகிறார்.

இதனிடையே தற்போது அம்பிகாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்ததவர்கள், இது நடிகை அம்பிகாவாக என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

ambika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment