/tamil-ie/media/media_files/uploads/2023/04/Sharmila.jpg)
டாக்டர் ஷெர்மிளா
தமிழகத்தில் கலாக்ஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களை பாதுகாக்க கலாச்சாரம் தேவையில்லை என்று நடிகையும் மருத்துவருமான ஷெர்மிளா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இயங்கி வரும் கலாக்ஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் மீது கல்லூரி மாணவர்கள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹரி பத்மன் என்ற பேராசிரியல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கல்லூரி மீதான எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நடிகையும் கலக்ஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அபிராமி வெங்கடாச்சலம் கல்லூரிக்கும், கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.
இந்த பாலியல் சர்ச்சைகள் 10 வருடங்களாக நடைபெற்று வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் இத்தனை நாள் புகார் செய்யவில்லை. அதேபோல் கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவியான எனக்கும் எனது தோழிகளுக்கும் பேராசிரியர் ஹரிபத்மனால் எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்று கூறியிருந்தார். அபிராமியின் கருத்து சமூகலைதளங்கில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கான எதிர்ப்பு குரலும் வலுத்து வருகிறது.
இதனிடையே அபிராமியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா அளித்த பேட்டியில், கலாக்ஷேத்ராவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பாலியல் தொல்லை நீடித்து வருவதாக கூறி மாணவிகள் போராட்டத்தை தொடங்கியபின்னர்தான் சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். இதனால் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்றால் இந்த விவகாரம் வெளியில் தெரிந்திருக்காது.
கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மன் அப்படிப்பட்டவர் இல்லை இதில் ஏதோ அரசியல் நடக்கிறது. என்னிடம் அவர் அப்படி நடந்துகொள்ளவில்லை என்று பேசுகிறார், இதன் மூலம் ஹரி பத்மன் மீது வந்துள்ள குற்றச்சாட்டை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. கலாக்ஷேத்ரா என்ற பெயர் வாயில் நுழையாதவர்கள் எல்லாம் அதை பற்றி குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்று பேசுகிறார். இந்த பெயர் யார் வாயிலும் நுழையாது என்றால், இது எங்களுக்கான விஷயம் எங்கள் சமூகத்திற்கான விஷயம் இதில் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று சொல்லாமல் சொல்கிறார். இந்த பேச்சு ஆதங்கமாக இல்லை ஆணவமாக எனக்கு தெரிகிறது.
மத்திய அரசின் நிதியில் செயல்பட்டு வரும் இந்த கல்வி நிறுவனம் நாம் கட்டும் வரியில் தான் செயல்படுகிறது. இந்த பிரச்சனையை யார் வேண்மானாலும் கேட்கலாம். கேள்வி கேட்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. 89 வருட பாரம்பரியம் என்று சொல்கிறார்கள். ஆனால் 4 வருடம் அங்கு படித்த அபிராமி இவ்வளவு பேசுகிறார். இத்தனை வருடமாக அக்கல்வி நிறுவனம் செயல்பட நாம் வரி கட்டியிருக்கிறோம். எங்களுக்கு கோபம் வரக்கூடாதா?
மக்கள் வரிப்பணத்திலல் செயல்படும் ஒரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு கொடுமை நடந்கலாமா? நாம் அவர்கள் சமூதாத்தை சேர்ந்த பெண்களுக்குதான் குரல் கொடுக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.