scorecardresearch

எங்கேயோ போயிட்டீங்க ஷிவாங்கி… பாடகர் மனோவுடன் செம சான்ஸ்!

Tamil Cinema Update : ரஜினியின் பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்துள்ள இவர் தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஜோவில் நடுவராக உள்ளார்.

எங்கேயோ போயிட்டீங்க ஷிவாங்கி… பாடகர் மனோவுடன் செம சான்ஸ்!

Singer Shivangi Concert With Singer Mono In Bengaluru : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியில் இவர் பாடிய பாடல்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற இவர் காமெடியிலும் கலக்கினார். இதில் புகழுடன் இவர் சேர்ந்து செய்த காமெடி ரகளைகள் இன்றளவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று வரும் சிவாங்கி, திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் ஏராமன படவாயப்புகளை பெற்று வரும் சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது ரியாலிட்டி ஷோ மற்றும் கச்சேரிகளில் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சிவாங்கி. டியர் யூ பிரதர் யூ என் யூடியூப் வெப் தொடரிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பாடகர் மனோவுடன் சக்சேரியில் பாட உள்ள நிகழ்ச்சி தொடர்பாக பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமைகொண்டவர் மனோ. ரஜினியின் பல படங்களுக்கு தெலுங்கில் குரல் கொடுத்துள்ள இவர் தற்போது விஜய் டிவியின் ரியாலிட்டி ஜோவில் நடுவராக உள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில். வரும் ஏப்ரல் 10-ந் தேதி நடைபெறும் முரளிஸ் மௌனராகம் என்ற இசைக்குழுவில் நடிகையும் பாடகியுமான சிவாங்கி பாடகர் மனோவுடன் இணைந்து பாட உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress and singer shivangiai concert with singer mano