/tamil-ie/media/media_files/uploads/2023/03/Adnrea.jpg)
நடிகை ஆண்டரியா
2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆண்டரியா. தொடர்ந்து 2007-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-1.jpg)
அதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, துப்பறிவாளன், வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-6.jpg)
நடிப்பு மட்டுமல்லாமல், பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், உள்ளிட்ட பன்முக திறமை கொண்ட ஆண்டரியா ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-5.jpg)
காமலினி முகர்ஜி, டாப்சி, எமி ஜாக்சன், இலியானா, உள்ளிட்ட சில நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ள ஆண்டரியா தற்போது பிசாசு 2 மாளிகை, கா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-4.jpg)
இதில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்துள்ள பிசாசு 2 படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-3.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆண்டரியா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதில் சமீபத்தில் அவர் மகளிர் தினத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலானது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Andrea-2.jpg)
அந்த வகையில் தற்போது ஆண்டரியா சேலையில் வெளியிட்டுள்ள புகைபடங்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.