Advertisment

நீங்க மந்திரமா... தந்திரமா... பன்முக திறமை ஆண்ரியா ரீசன்ட் க்ளிக்ஸ்  

நாயகியாக நடிக்க தகுதிகள் இருந்தாலும் ஆண்டரியாவுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களே அதிகம் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Andrea

நடிகை ஆண்டரியா

தமிழ் சினிமாவில் நடிகை பாடகி டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட நடிகை ஆண்டரியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்டரியா.

publive-image

அதன்பிறகு 2007-ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஆண்டரியா சிறப்பாக நடித்திருப்பார்.

publive-image

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்.

publive-image

நாயகியாக நடிக்க தகுதிகள் இருந்தாலும் ஆண்டரியாவுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களே அதிகம் கிடைத்துள்ளது. இதில் வட சென்னை படத்தில் அவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

publive-image

தற்போது பிசாசு 2, கா, நோ என்டரி, சைந்தவ் உள்ளிட்ட அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ள ஆண்டரியா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது ஆண்டரியா ஸ்டேஜில் பாடல் பாடுவது போல் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment