சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகியாக உயர்ந்துள்ள அனிகா சுரேந்தர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானர் அனிகா சுரேந்தர். தொடர்ந்து ரேஸ், 5 சுந்தரிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அனிகா, விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான், ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் மம்முட்டியுடன், தி கிரேட் பாதர், பாஸ்கர் தி ராஸ்கல், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனிகா, அஜித்துடன் தமிழில் நடித்த விஸ்வாசம் படத்தில் பெரிய பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

இந்த படத்தில் கண்ணான கண்ணே பாடல் இவருக்காவே எழுதியது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதியுடனும் அனிகா நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்த அனிகா தற்போது தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா படத்தில் நாயகியாக மாறியுள்ளார். இந்த படத்தில் கைதி அர்ஜூன் தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil