2006-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான போட்டோ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. தொடர்ந்து 2007-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாக கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, கசலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியான தமிழில் பாவக்கதைகள் வெப் தொடரில் நடித்த அஞ்சலி, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ரெட்ட படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்ததற்காக அஞ்சலிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். தற்போது ராம்சரன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சினிமா மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் அஞ்சலி, அங்காடி தெரு படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது பெற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அஞ்சலி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் யாருங்க நீங்க போய்ட்டு அஞ்சலிய வர சொல்லுங்க என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“