ரஜினிக்கு தங்கை, விஜய்க்கு காதலி; கேப்டனுக்கு மருமகள்: 90'ஸ் நடிகை இப்போ என்ன செய்கிறார்?

விஜயக்கு காதலி, ரஜினிகாந்துக்கு தங்கை, கேப்டன் விஜயகாந்துக்கு மருமகள், தங்கை என பல கேரக்டரில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

விஜயக்கு காதலி, ரஜினிகாந்துக்கு தங்கை, கேப்டன் விஜயகாந்துக்கு மருமகள், தங்கை என பல கேரக்டரில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ajnju aravind

தமிழ் சினிமாவில், ரஜினிக்கு தங்கை, விஜய்க்கு காதலி, விஜயகாந்துக்கு மருமகள், தங்கை என பல கேரக்டரில் நடித்துள்ள நடிகை, அஜித் படத்தை மிஸ் செய்ததாகவும், அந்த படத்தில் அஜித் தான் ஹீரோ என்று தெரிந்திருந்தால் மிஸ் செய்திருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

90-களில் வெளியான தமிழ் படங்கள், மற்றும் அதில் நடித்த நடிகர் நடிகைகள் தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்களை பற்றிய தகவல்கள் அவ்வபபோது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், 90-கிட்ஸ்களின் மனதில் ஸ்டாரங்காக அமர்ந்திருக்கும் நடிகை தான். அஞ்சு அரவிந்த். இவர் விஜயக்கு காதலி, ரஜினிகாந்துக்கு தங்கை, கேப்டன் விஜயகாந்துக்கு மருமகள் என பல கேரக்டரில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Anju Aravinth

1995-ம் ஆண்டு வெளியாக அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சு அரவிந்த். அடுத்து பார்வதி ப்ரணயம் என்ற படத்தில் நடித்திருந்தார், 1996-ம் ஆண்டு, விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான புவே உனக்காக படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் இவரை ஒருதலையாக காதலிப்பார். ஆனால் இவர் தனது முறைப்பையனை காதலிப்பதால், விஜய் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குவார். 

Advertisment
Advertisements

இந்த படம் விஜய்க்கு திரைத்துறையில் பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்த நிலையில், அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாவதற்கு காரணமாக அமைந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சு அரவிந்த், 1997-ம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சுந்தர்.சி இயக்கிய இந்த படமும் பெரிய வெற்றியை பெற்றிருந்துது. அதன்பிறகு ஒன்ஸ்மோர் படத்தில் மீண்டும் விஜயுடன் நடித்திருந்தார் அஞ்சு அரவிந்த்.

அதேபோல், வானத்தைபோல படத்தில் விஜயகாந்துக்கு மருமகளாகவும், அடுத்த வருடமே வெளியான வாஞ்சிநாதன் படத்தில் அவரின் தங்கையாகவும் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு கண்ணா என்னை தேடுகிறேன் என்ற படத்தில் நடித்திருந்த அஞ்சு அரவிந்த், அதன்பிறகு, தமிழ் படங்களில்நடிக்காத நிலையில், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு மலையாளத்தில் கவஷிகல் என்ற படத்தில் நடித்திருந்தார் அஞ்சு அரவிந்த்.

Anju Aravinth2

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ள அஞ்சு அரவிந்த், தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிப்படமான காதல் கோட்டை படத்தின் வாய்ப்பை மிஸ் செய்துள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அருணாச்சலம் படத்தில் நடித்தபோது எனக்கு காதல் கோட்டை படத்தின் வாய்ப்பு வந்தது. அப்போது அருணாச்சலமா அல்லது காதல் கோட்டையா என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை. ஆனால் நான் ரஜினிசாருடன் தான் நடிப்பேன் என்று அருணாச்சலம் படத்தை தேர்வு செய்துவிட்டேன்.

இதே காலக்கட்டத்தில் முரளி நடிப்பில் வெளியான பொற்காலம் படத்தின் வாய்ப்பும் வந்தது. அதையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் காதல் கோட்டை படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, சரி பாத்துக்கலாம் என்று நினைத்தேன். தலையில் என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும். அதனால் தான் அந்த படம் பண்ண முடியவில்லை. காதல் கோடடை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போது அந்த படத்தில் அஜித் சார் நடிப்பார் என்று தெரியாது. தெரிந்திருந்தால் தேதிகள் ஒதுக்கி அந்த படத்தில் நடித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: