/indian-express-tamil/media/media_files/2025/08/23/anju-aravindh-vijay-2025-08-23-13-09-13.jpg)
ரஜினிக்கு தங்கை, விஜயகாந்துக்கு மருமகள், விஜய்க்கு காதலி என பல கேரக்டரில் நடித்த புகழ்பெற்ற நடிகை அஞ்சு அரவிந்த் 90-ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இவர் தற்போது தனது மகள் பற்றியும் தனது திருமண வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார்.
1995-ம் ஆண்டு வெளியாக அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சு அரவிந்த். அடுத்து பார்வதி ப்ரணயம் என்ற படத்தில் நடித்திருந்தார், 1996-ம் ஆண்டு, விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான புவே உனக்காக படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் இவரை ஒருதலையாக காதலிப்பார். ஆனால் இவர் தனது முறைப்பையனை காதலிப்பதால், விஜய் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குவார்.
தொடர்ந்து, 1997-ம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்த இவர், வானத்தைபோல படத்தில் விஜயகாந்துக்கு மருமகளாகவும், வாஞ்சிநாதன் படத்தில் அவரின் தங்கையாகவும் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு கண்ணா என்னை தேடுகிறேன் என்ற படத்தில் நடித்திருந்த அஞ்சு அரவிந்த், அதன்பிறகு, தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது மலையாளத்தில், ஜலகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய அஞ்சு, தமிழில் ஆசைதம்பி படம் வரும்போது எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. பூவே உனக்காக படம் பார்த்து தான் இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது, திருமணம் ஆனபிறகும் நான் படங்களில் நடித்து வந்தேன். வாஞ்சிநாதன் படம் திருமணத்திற்கு பிறகு நடித்தது தான். முதல் திருமணம் ஆகி டைவர்ஸ் ஆகிவிட்டது. 2-வது திருமணம் ஆகி அவர் இறந்துவிட்டார். இப்போது நான் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்.
சஞ்சய் என்பவருடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். பெங்களூருவில் எனக்கு டான்ஸ் டீச்சர் என்ற அடையாளத்தை கொடுத்தது அவர் தான். நான் 8-வது படிக்கும்போது எனது முதல் க்ரஷாக இருந்தவர் தான் இந்த சஞ்சய். எனது மகள் விஜய் சாரின் தீவிர ரசிகை. ஒருமுறை அவரை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் அவருக்கு நாங்கள் கொடுத்த மெசேஜ் போகவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு இருப்பது ஒரு மகள்தான் யூடியூப்பில் எதோ ஒரு சேனலில் எனக்கு 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர். இதை பார்த்து எனது மகள். அந்த 3 குழந்தைகளை எங்கே ஒளிச்சி வைச்சிருக்க என்று கேட்கிறாள் என அஞ்சு அரவிந்த் கலகலப்பாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.