பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஷ்வரன். 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்,அதன்பிறகு அ ஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்திருந்தார். இடைப்பட்ட ஆண்டுகளில் தெலுங்கு மலையாளம் என்று நடித்து வருகிறார்.
கொடி படத்தில் நடித்த பிறகு 5 வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்த அனுபாமா அடுத்து ரவி மோகன் நடிப்பில், சைரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில், பைசன், லாக்டவுன், ட்ராகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ட்ராகன் படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபமா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காதல் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்பதே, மிகப்பெரிய பொய் என்று கூறியுள்ளார். ஒரு நேர்காணலில் காதல் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் வார்த்தை உலகின் மிகப்பெரிய பொய். ஒருபோதும் நடக்காத ஒன்று.
எனது உயிரே நீதான், நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்லக்கூடிய நச்சுக் காதலில் மாட்டிக்கொண்டு இருப்பவர்கள் எல்லோரும் தயவும் செய்து உடனே அதை விட்டு ஓடி விடுங்கள் என்பதை நான் எனது அறிவுரையாக அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்'' என்று கூறினார். அனுபமாவின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் ஏன் இப்படி சொல்கிறார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளது,
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“