மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இந்த படம் அவருக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.
2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதன்பிறகு 5 வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்தார்.
அடுத்து சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது அனுபாமா தமிழில் சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் பிரமேம் தெலுங்கு ரீமெக் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
நாக சைதன்யா நாயகனாக நடித்த இந்த படம் தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன்பிறகு தெலுங்கு மலையாளம் என்று நடித்து வரும் அனுபாமா, கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்த்திகேயா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் வெளியான ஜெயம் ரவியின் சைரன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபாமா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
இன்று 28 வயதாகிறது. என் வாழ்வை, எங்கள் வாழ்க்கையை உருவாக்கியதற்கு நன்றி. 18 வயதில் இருந்து, எனது ஒவ்வொரு அடியிலும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள், நம்பமுடியாத என பயணத்தின் உயர் மற்றும் தாழ்வுகளில் என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள். உங்களின் அன்பும் ஆதரவும் என்னைத் தொடர்ந்து உற்சாகமாக வைத்திருக்கும்.
அழகாக வாழ்வதற்கும், தைரியமாக கனவு காண்பதற்கும், இந்த அற்புதமான சாகசத்தை ஒன்றாக பகிர்ந்து கொள்வதற்கும் என் சிறகுகளுக்கு அடியில் காற்றாக இருப்பதற்கு நன்றி நான் உங்களை நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.