New Update
![Anupama](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/03/Anupama.jpg)
2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுபாமா பரமேஷ்வரன். தொடர்ந்து ஜேம்ஸ் ஆலிஸ் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
அதன்பிறகு அ ஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர் தொடர்ந்து ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்திருந்தார்.
2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும் அதன்பிறகு சில ஆண்டுகள் தமிழில் நடிக்கவில்லை. 5 வருடங்களுக்கு பிறகு தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்த அனுபாமா தற்போது சைரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இடைப்பட் ஆண்டுகளில் தெலுங்கு மலையாளம் என்று நடித்து வரும் அனுபாமா, கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சைரன், ஜேஎஸ்கே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுபாமா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.