Advertisment
Presenting Partner
Desktop GIF

சிவகார்த்திகேயன் மீது வன்மம்: இமான் சர்ச்சையில் நடிகை கருத்து

இமான் தனது குழந்தைகளுக்காக இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொல்கிறார், ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

author-image
WebDesk
New Update
Sivakarthikeryan

சிவகார்த்திகேயன் - இமான் விவகாரம்

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் பலரும் அவர் மீது குறை சொல்லி வருவதாகவும், இமான் இத்தனை நாட்கள் கழித்து இதை சொல்ல காரணம் என்ன என்பது குறித்து நடிகை அனுபரமி கூறியுள்ளார்.

Advertisment

சிவகார்த்திகேயனின் ஆரம்ப கட்ட படங்களுக்கு தனது இசையால் வெற்றியை கொடுத்தவர் டி.இமான். இவர்கள் இருவரும் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றிய நிலையில், நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவில்லை. இந்த படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இதனிடையே கடந்த 2020-ம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்த இமான் 2-வது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இமான், இனி சிவகார்த்திகேயனுடன் இணைய வாய்பே இல்லை. அடுத்து ஜென்மத்தில் கூட இணைய வாய்ப்பில்லை. என் குழந்தைகளின் எதிர்காலம் கருத்தி அவர் செய்ததை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார். இமானின் இந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.

அதேபோல் ஒரு சிலர் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை அனுபிரமி சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காமல் இந்த மாதிரி தகவல்களை பரப்பி விடுகிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த விஷயம் அவரது குழந்தைகளை பாதிக்கும் என்றால், 2-வது திருமணம் செய்துகொண்ட பின் இமான் ஏன் இந்த விஷயத்தை பற்றி கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் மீது தவறு இருக்கிறதா இல்லையா என்பது தெரியாமல் அவர் மீது சிலர் வன்மத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளார். வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது அசிங்கத்தை சுமத்துவதற்கு காரணம் என்னவாக இருக்கும், சிவாகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

இமான் தனது குழந்தைகளுக்காக இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொல்கிறார், ஏன் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? யாராக இருந்தாலும் அந்தரங்கத்தை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan D Imman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment