தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஒரியா என 6 மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நடிகை அனுராதா தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட ஒரு நேர்காணலில், நடிகர் சிரஞ்சீவி பற்றி கூறிய ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
1979-ம் ஆண்டு வெளியாள காளிகோயில் கபாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அனுராதா, தொடர்ந்து, விஜயகாந்த், கமல்ஹாசன், மோகன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 30-க்கு மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள, இவர், நடன இயக்குனர் கிருஷ்ணகுமார் என்பவரின் மகள் ஆவார்.
இவரது தாய் சரோஜா தேவி மேக்கப் ஆர்ட்டிஸ்டாக சினிமா துறையில் பணியாற்றியுள்ளார். நாயகியாக மட்டுமல்லாமல், ஒரு பாடலுகாக நடனமாடும் நடிகையாகவும் வலம் வந்த அனுராதா ஒருமுறை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடனமாடியுள்ளார். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த சிரஞ்சீவி படத்தில், கிருஷ்ணகுமார் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் கம்போசிங் செய்த ஒரு பாடலுக்கு, தனது மகளை நடனமாட அழைத்துள்ளார்.
அப்பாவின் அழைப்பை ஏற்க மறுத்த அனுராதா, நடித்தால் நாயகியாக தான் நடிப்பேன் என்று சொல்ல, அவரது அம்மாவும் அப்படியே கூறியுள்ளார். ஆனால் கிருஷ்ணகுமார் வற்புறுத்தி அழைக்கவே, அனுராதா பாடலுக்கு நடமாட ஒப்புக்கொண்டு நடித்துள்ளார். பாடல் காட்சியின் முடிவில், கேமரா முன்பு சிரஞ்சீவி நிற்க அவரருக்கு பின்னால் வந்து போஸ் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கியுள்ளனர். படமாக்கி முடித்தவுடன் போட்டோ எடுக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அப்போது மாடர்ன் உடையில் இருந்த அனுராதா சிரஞ்சீவியின் பின்னால் இருந்து போஸ் கொடுத்தபோது, சிரஞ்சீவியின் கை அவரது இடுப்புக்கு கீழ் இருந்துள்ளது. சாதாரணமாக இப்படி நடப்பது வழக்கம் தான் என்றாலும், இதை கவனித்த, அனுராதாவின் அம்மா, அருகில் சென்று, சிரஞ்சீவியின் கையை எடுத்துவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அடுத்த பாடல் காட்சிக்கான உடை கொடுக்கப்பட்டபோது, கால் முட்டி வரைதான் உடை இருக்கிறது நான் இன்னும் சிறிதாகத்தான் போடுவேன் இதை வெட்டி தையுங்கள் என்று அனுராதா கூறியுள்ளார்.
அனுராதாவின் இந்த செயலை அருகில் இருந்து பார்த்த நடிகர் சிரஞ்சீவி, அனுராதாவின் அம்மாவிடம் சென்று, அன்று என் கைப்பட்டதை எடுத்துவிட்டு சென்றீர்களே இன்று உங்க பொண்ணு தொடை தெரியும் அளவுக்கு ஆடை கேட்கிறாரே இதற்கு என்ன சொல்றீங்க என்று கேட்டுள்ளார். இந்த தகவலை நடிகை அனுராதா சாய் வித் சித்ரா யூடியூப் சேனலில், அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“