ஜெயிலர் படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துடன் நடிகையும் ரஜினிகாந்தின் ரசிகையுமான அபர்னா பாலமுரளி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே ஜெய்சல்மர், மும்பை, தமிழகத்தின் தென் பகுதிகள், மங்களூரு என பல இடங்களுக்ளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்புகள் அனைத்திலும் பங்கேற்ற ரஜினிகாந்த் ஒவ்வொரு ஊரக்கு செல்லும்போதும் அவருக்கு கிடைக்கும் வித்தியாசமான வரவேற்பு குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது கேரளா சென்றுள்ளார். இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் அவருடன் கும்பல் கும்பலாக செல்ஃபி எடுக்க முயற்சிக்கன்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர் நடிகைகளே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலால்முரளி, நடிகர் ரஜினிகாந்தின் கேரளா வருகையின் போது விமானத்தில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபர்ணா, “ரசிக பெண்ணின் தருணம்! ஒரே ஒருவருடன் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் 10 நாள் ஷெட்யூலுக்காக ரஜினிகாந்த் கொச்சிக்கு சென்றுள்ள நிலையில் ஒட்டுமொத்த குழுவும் கொச்சியில் முகாமிட்டுள்ளனர். படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தொற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும், இதன்பிறகு படத்தின் அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றிணைந்துள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயிலர் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/