சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடித்து, தற்போது சினிமாவில் நடிகையாக மாறியுள்ள அறந்தாங்கி நிஷா, சமீபத்தில் சென்னையில் வீடு வாங்கியுள்ள நிலையில், இதற்கு காரணம் என்ன? ஏன் வீடு வாங்கினேன் என்பது குறித்து ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
கடந்த 2015-ம் ஆண்டு விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள, இவர், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில், போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.
அதன்பிறகு, பி.பி ஜோடிகள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக வந்த அறந்தாங்கி நிஷா, மாரி 2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ரஜினிகாந்துடன் ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த அறந்தாங்கி நிஷா, கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நிஷா, சமீபத்தில் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கியதாக அறிவித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த வீடு வாங்கியதற்கு காரணம் என்ன? என்ன பிரச்னையில் இந்த நல்ல விஷயம் நடந்தது என்பது குறித்து நிஷா ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். வீடு வாங்கிய பத்திரத்தை தனது அப்பாவிடம் காட்டுவதற்காக, அறந்தாங்கி சென்ற நிஷா, இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
வீட்டில் இருந்து கிளம்பியது முதல், தனது அப்பாவை பார்த்துவிட்டு, மீண்டும் சென்னை வந்தது வரை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ள நிஷா, அதில், சென்னையில் இருந்து கிளம்பி, அறங்தாங்கியில் தனது அப்பாவை சந்தித்து, வீட்டின் பத்திரத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு உறவினர்கள், அனைவருக்கும் பத்திரித்தை காட்டிவிட்டு, தனது சகோதர்ரின் வீட்டில், சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். எனது அப்பாவிடம், இந்த பத்திரத்தை கொடுத்த்து மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும், கூறியுள்ளார்.
வீடியோவின் இறுதியில், நான் சென்னையில் வீடு கேட்டபோது, எனக்கு பலரும் வீடு கொடுக்கவில்லை. இது குறித்து நான் வெளியிட்டபோது, பலரும் நீங்கள் சென்னையில் சொந்த வீடு வாங்குங்கள் என்று சொன்னர்கள். உண்மையாக எனக்கு சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையே இல்லை. சென்னையில் எனக்கு சொந்தங்களும் இல்லை. ஆனால் இப்போது வீடு வாங்கி இருக்கிறேன். சொந்தக்கார்ர்கள் அனைவருக்கும் சென்னை வந்தால், வீட்டுக்கு வாங்க என்று சொல்லி இருக்கிறேன்.
சென்னையில் எனக்கு வீடு கொடுக்காத அனைவருக்கும் நன்றி, நீங்கள் இப்படி செய்த்தால் தான் நான் சொந்தமாக வீடு வாங்கி இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நிஷா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil